20 வேர்ட்பிரஸ் Plug ins

எனது self hosted Wordpress பதிவினில் பயன்படுத்தும் சில plug ins,

1. Akismet

Spam comment அனைத்தையும் வடிகட்டிவிடுகிறது. 90% நம்பகத்தன்மையானது.

2. Comment Luv

நமக்கு பின்னூட்டமிடுபவர்களின்பதிவினில் இறுதியாகப்பதியப்பட்ட பதிவின் சுட்டியினை பின்னூட்டத்துடன் சேர்த்து பதிந்துவிடுகிறது. அதனால் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை ஊக்குவிப்பதுடன் நமது துறைசார்ந்த நண்பர்களின் பதிவு சுட்டியை மற்றய புதிய வாசகர்களுடனும் பகிர்ந்து கொண்டதுபோல் ஆகிறது.

3. Contact Form 7

பதிவிற்க வருகைதரும் வாசகர்கள் பதிவரைத்தொடர்புகொள்ள ஓர் இலகு contact form ஒன்றினை இந்த plug in தருகிறது. நிறுவவும் மிக மிக எழிது.

4. Feedburner Feedsmith

தளத்திலுள்ள RSS ஓடையினை எவ்விதத்தில் தொடர்புகொண்மாலும் அதை Google Feedburner சுட்டிக்கு  திசைதிருப்பிவிடும். இதனால் RSS, RSS2 & atom ஓடையென எதனைத்தெடர்புகொண்டாலும் நமக்கு சிக்கலேயில்லாமல் அந்த பயனர் feedburner ற்கு திசைதிருப்பப்படுவார்.

5. Statepress Reloded

இது அப்படியேவேர்ட்பிரஸ்.com Analytic இனை ஒத்தது. சில புதிய வசதிகளுடன் self hosted வேர்ட்பிரசுக்கென பிரத்தியொகமாக தயாரிக்கப்பட்டது.

6. TinyMCE Advance

வேர்ட்பிரஸ் TinyMCE text editor இனில் புதிய பல வசதிகளை சேர்த்துவிடுவதனால் பதிவிடும் நேரம் மீதமாவதுடன் அலகுவாகவும் இருக்கும்.

7. Wordpress.com states

இது wordpress.com analytics மற்றும் வழமையான wordpress.com ல் இருக்கம் வசதிகளை wordpress.com API மூலம் self hosted பயனர்களிற்கு தருகின்றது. புதிதாக selfhosted account பாவிப்பவர்களிற்கு உதவியாகவிருக்கும்.

8. Wordpress Mobile Edition

வேர்ட்பிரஸ் பதிவினை ஆன்ரொயிட், ஐபோன் மற்றும் விண்டோஸ் மொபைலில் பார்வையிடும்வண்ணம் இதற்கென உள்ளியைந்த template மூலம் மாற்றி தருகிறது. ஆனால் WAP browser ற்கு ஆதரவில்லை.

9.Wordpress  Mobile

வேர்ட்பிரஸ் பதிவினை WAP Browsers ல் பார்வையிடும்விதமாக மாற்றி தருகிறது. அத்துடன் Google Mobile Adsense க்கென வடிவமைக்கப்பட்டதனால் நமது சாதாரண பதிவானது விஷேடமாக மொபைல் வெப் ஆக வடிவமைக்கப்பட்டதுபோல இருக்கும்.

10. WP125

125px Ad slots இனை நமது பதிவில் விரும்பிய இடத்தில் இட இந்த plug in உதவுகிறது. இதை சாதைரணமாக html/text wiget பணன்படுத்தியும் அமைக்கலாம். ஆயினும் no of clicks, expire date என விதவிதமாக தகவமைக்க இந்த plug in உதவுகிறது.

11. WP Greet Box

நமது தளத்திற்கு வரும் வாசகர்களை RSS Feed ல் பதிவுசெய்ய தூண்டும் வண்ணம் இந்த plug in உதவுகிறது. மற்றும் பதிவிற்கு வரும் வாசகர் digg.com இலிருந்து வருவாராயின் digg ல் உங்கள் பதிவிற்கு வாக்களிக்குமாறும், Google மூலம் வரும் வாசகர்களை சந்தாதாரர் ஆகுமாறும் தானாகவே கேட்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

12. Add to Any

நமது பதிவினை பலதரப்பட்ட திரட்டிகளிற்கும் bookmark தளங்களிற்கும் தந்து வாசகர்களை அதிகமாக்க இந்த plug in உதவுகிறது. மற்றும் வாசகர் தனக்கு பிடித்த பதிவாயின் அவரும் இந்த plug in மூலம் நமது செய்தியை நண்பர்களுடன் பகிர ஏதுவாகிறது.

13. Advertising Manager

அது Google adsense, adbrite, Bidversor, Text Link Ads,  Yahoo Ads மற்றும் Microsoft Ads போன்றவற்றை இந்த ஒரு plug in மேலாண்மைசெய்ய உதவுகிறது. மற்றும் post இனுள் விளம்பரங்கள் வருமாறு தகவமைக்கவும் முடியும்.

14. Google Analyticator

இந்த plug in ஆனது Google Analytic இனை இலகுவாக நமது பதிவின் முகவரியோடு கோர்த்துவிடுகிறது. Google Analytic ID ஐ தருவது மட்டுமே நமது வேலை.

15.Google XML Sitemaps

XML Sitemap இனை உருவாக்கி Yahoo, Google, Bing, Ask என பல சேர்ச் எஞ்சின்களிற்கு தகவல் அனுப்புவதெற்கென உருவாக்கப்பட்ட plug in இதுவாகும். இதன் சிறப்பம்சம் நாம் குறிப்பிட்ட காலத்திற்கேற்றவாறு sitemap இனை update செய்து தானாகவே submit செய்துவிடுகிறது.

16. Open ID

அண்மைக்காலமாக எனது Blogger ID மூலம் blogspot பதிவுகளில் பின்னூட்டமிடமுடியாமலிருந்தபோது அதற்குத் தீர்வாக இந்த plug In இனை பயன்படுத்துகிறேன். இது self hosted wordpress URL இனை openID ஆக பயன்படுத்த வழிசமைக்கிறது. openID இனை ஆதரிக்கும் எங்கும் நமது தளத்தினையே ID யாக பயன்படுத்தலாம்.

17. Platinum SEO Pack

All in One SEO என பிரபல்யமான plug In ற்கு மாற்றீடாக புதிய SEO வரமுறைகளிற்கேற்ப வடிவமைக்கப்பட்ட plug in. கண்டிப்பாக அத்தனை பதிவுகளிலும் இருக்கவேண்டியதொன்று.

18. Simple tags

நமது பதிவிற்கேற்ப நிறைய tags களை தானாகவே தேடி நமக்குப்பரிந்துரைக்கிறது. இதனால் hi value keywords களை இனம்கண்டு நமது தள rank இனை அதிகரிக்கலாம்.

19. Wordpress Database Backup

Wordpress உடன் உள்ளிணைந்த Export வசதியைவிட இது பலமடங்கு உபயோகமானது.

20. WP-Insert

பல விளம்பரங்களை விரும்பிய இடத்தில் இட இந்த plug in உதகூகிறது.

நீங்கள் பயன்படுத்தும் plug ins பற்றியும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!

இவையாவும் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய plug ins ஆகும். சில பிரத்தியோகத்தேவைகளிற்கென வடிவமைக்கப்பட்ட plug ins பற்றி பின்னர் விபரிக்கிறேன்.

அன்புடன் சுபாஷ்.

Did you enjoy this post? Why not leave a comment below and continue the conversation, or subscribe to my feed and get articles like this delivered automatically to your feed reader.

Comments

How about WP google transliteration plugin…

Aha.. Good Post for WP personalities
//பல விளம்பரங்களை விரும்பிய இடத்தில் இட இந்த plug in உதகூகிறது.

நீங்கள் பயன்படுத்தும் plug ins பற்றியும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் rajesh

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் tamilnenjam

உங்கள் பதிவிலும் சரி மற்றய பிளாகர் பதிவுகளிலும் சரி. என்னால் பின்னுட்டம் இட முடிவதில்லையே? சிலவேளைகளில் பிளாகர் பதிவுகள் திறப்பதேயில்லை.
மற்றும் ஓர்கிட் தளமும் இதேபோலத்தான். கூகிள் சேர்ச்சும் சரியாக வேலைசெய்வதில்லை.
எனக்குமட்டும்தான் இப்படியா????

நீங்க விசயமுள்ள ஆளுதான்.. தகவல்களுக்கு நன்றி..

நீங்க கற்றதை மற்றவனுக்கும் சொல்லிகொடுகிரீங்க பாருங்க அந்த “மனசு ” எல்லோருக்கும் வராது ……….நன்றிகள் நமக்கு இது புரியாதுங்க. தடே ழுதி மட்டும் தான் புரியும் . நீண்ட காலத்தின் பின் தொடர்பு கொள்கிறேன் நினைவு இருக்குங்களா ? l

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் குறை ஒன்றும் இல்லை
இனி பின்னூட்டமிடும்போது உங்கள் தளத்தின் சுட்டி சரியாகவிருக்கிள்றதாவென பார்த்துவிடுங்களேன்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் nilaamathy .
நீண்ட நாட்களிற்குப்பின்னர் வந்திரு்ககீங்க. எப்படியிருக்கிறீர்கள். மறக்கவில்லை.
இந்தப்பதிவிலேயும் இமெயில் சந்தா போட்டுவிடுங்களேன்!!!!
:)

Leave a comment

(required)

(required)


CommentLuv Enabled